கேட்கும் திறனைப் பாதிக்கிறதா கொரோனா தொற்று?

0
2

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் பலருக்கு அவர்களின் செவித்திறன் மற்றும் கேட்கும் திறன் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் பலருக்கும் பலவித அறிகுறிகளை புதிது புதிதாக உண்டாக்கி வருகிறது. அதிலும் உருமாற்றம் பெற்ற கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் சிலருக்கு காது இரைச்சல், காது கேட்கும் திறன் குறைவது போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆகையால் தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் செவித்திறன் மற்றும் கேட்கும் திறன் குறித்த விழிப்புணர்வையும் மருத்துவத் துறையினர் ஏற்படுத்தி வருகிறார்கள்.  குறிப்பாக Tinnitus எனப்படும் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு, செவித்திறன் குறைவதாக மருத்துவர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள்.

எனவே மக்கள் கொரோனாத் தொற்று பாதிப்பின் அறிகுறிகளை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, அது குறித்த விழிப்புணர்வையும், தொற்று பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு மருத்துவ நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்து.

டொக்டர். வேணுகோபால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here