கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய முனைவது யார்?- சுனில் ஹந்துன்நெத்தி!

0
2

தொழிற்சங்கங்களே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை விற்பனை செய்ய முனைவது போன்றும், அரசாங்கம் அதனை மீட்டது போன்ற தோரணையில் சிலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக ஜே.வி.பியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கிழக்கு முனையத்தின் முழு உரிமையையும் பெற்றமைக்கான பெருமையை தம்வசப்படுத்திக் கொள்ளும், வெட்கமில்லாத முயற்சியில் அரசாங்கத்தின் சில பிரிவுகள் ஈடுபட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாரிய போராட்டம் காரணமாகவே, ஒரு இந்திய நிறுவனத்திடம் வழங்கப்படவிருந்த 49 வீத பங்குகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டது. எனினும் இதனை அரசாங்கத்தின் வெற்றி என்று சிலர் கூறிவருகின்றனர். இது வெட்கக்கேடான செயல் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here