காஸ்மீர் மக்களுக்கு நீதி கேட்டு கொழும்பில் போராட்டம் !

0
1

காஸ்மீரில் வாழும் மக்களுக்கும் உணர்வுகளும் உரிமைகளும் இருக்கிறது. அவர்களின் உடலில் ஓடும் இரத்தமும் சிவப்பே. அங்கு துயரில் வாழும் மக்களுக்கு சர்வதேச அமைப்புக்கள் தலையிட்டு நீதி பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் எனும் கோரிக்கைகளுடன். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான காரியாலய முன்றலில் பிரபல சமூக செயற்பாட்டாளரும் காஸ்மிருக்கான குரல்கள் அமைப்பின் தலைவருமான மிப்ளால் மௌலவியின் தலைமையில் அடையாளப் போராட்டமும், மகஜர் கையளிப்பும் நேற்று (05) மாலை ஐ.நா காரியாலய முன்றலில் நடைபெற்றது.

சுலோகங்களையும், இலங்கை தேசிய கொடியையும் ஏந்தி, சமூக இடைவெளிகளை பேணி நடைபெற்ற இந்த அடையாளப் போராட்டத்தின் பின்னர், ஐ.நா காரியாலய அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்திலும் இது தொடர்பிலான மகஜர் ஒன்று அன்றைய தினமே கையளிக்கப்பட்டது. இந்த அடையாளப் போராட்டத்தில் சமூக நல செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

நூருல் ஹுதா உமர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here