காத்தான்குடி 10 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்புக்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் சிபாரிசு

0
2

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ள 10 கிராம கிராமசேவகர் பிரிவுகளையும் விடுவிப்பதற்கான சிபாரிசை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு இன்று (06) பிற்பகல் பரிந்துரை செய்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என் மயூரன் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை தான் தொடர்புகொண்டு காத்தான்குடி நிலவரம் தொடர்பாக கேட்டபோது தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் சற்று முன் சிபாரிசு செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இனி தேசிய கோவிட் தடுப்பு செயலணியிடமிருந்து விடுவிப்பு தொடர்பான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக உழைத்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் உட்பட அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் ஏனைய உயரதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here