கல்முனை மாநகர திண்மக் கழிவகற்றலுக்கு புதிய வாகனம் : சட்ட நடவடிக்கையும் கடுமையாக்கப்பட்டுள்ளது – டாக்டர் அர்சத் காரியப்பர்

0
12

நூருல் ஹுதா உமர் 

கல்முனை மாநகர சபையினால் மாநகர மக்களின் திண்மக்கழிவகற்றும் தேவையை பூர்த்திசெய்ய திண்மக்கழிவகற்றும் வாகனம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (27) மாலை கல்முனை மாநகர முன்றலில் நடைபெற்றது.  திருத்தியமைக்கப்பட்ட வாகனம் கல்முனை மாநகர சபை  முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர். 

இதன் பின்னர் கருத்து தெரிவித்த கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர், புதிதாக சேவைக்கு வந்துள்ள இந்த திண்மக்கழிவகற்றல் வாகனம் ஏ வலயத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளது. அண்மைக்காலமாக திண்ம கழிவகற்றல் நடவடிக்கைகளில் ஒரு சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தது. கழிவுகள் கொட்டப்படும் பள்ளகாட்டில் ஜெ.சி.பி இயந்திரத்தின் பழுது, குப்பைகளை பரிமாற்றம் செய்து ஏற்றப்படும் இடமின்மை போன்ற காரணங்களினால் திண்ம கழிவகற்றல் நடவடிக்கைகளில் தாமத நிலை காணப்பட்டது.
இவ்விரு காரணிகளுக்கு மாற்றீட்டு நடவடிக்கைகள் கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில தினங்களில் திண்ம கழிவகற்றல் நடவடிக்கைகள் வழமை போல் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் வெகு விரைவில் திண்ம கழிவகற்றல் வாகனங்கள் வரும் தினங்கள் முன்கூட்டி அறிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது இடங்களிள் குப்பை போடுதல் முன்பை விட கடுமையான முறையில் தடை செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட நடவடிக்கையும் கடுமையாக்கப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here