ஓமானிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள்!

0
14

தொழில் நிமித்தம் ஓமான் சென்று அங்கு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியிருந்த 248 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஓமான் – மஸ்கட் நகரலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் அவர்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அவர்களில் அதிகமானோர் வீட்டுப் பணிப்பெண்களாக சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் கீழ் முன்னெடுத்து செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here