ஓட்டமாவடியில் போதை பொருளுடன் ஒருவர் கைது!

0
9

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகல் ஒன்றுக்கமைய, ஓட்டமாவடி பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 32 வயதுடைய ஒருவரை நேற்று (24) இரவு கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 3 கிராம் 80 மில்லி கிராம் போதைப் பொருளை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவதினமான நேற்று இரவு வாழைச்சேனை குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார், ஓட்டுமாவடி நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் குறித்த நபரை சுற்றி வளைத்து பிடித்து சோதனையிட்ட போது, அவரிடம் இருந்து 3 கிராம் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here