ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று (23) பங்கேற்கவுள்ளார்.
இம்முறை ஜெனீவா கூட்டத்தொடர் இணைய காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்று வருகின்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (22) ஆரம்பமானது.
இம்முறை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான வருடாந்த அறிக்கை நாளை (24) சமர்ப்பிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.