இலங்கை தொடர்பான செயலகத்திற்கு நிபுணர்களை நியமிப்பதற்கான செற்பாட்டை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆரம்பிக்கிறது.
அதேவேளை ஐ.நா பொதுச் சபையிடமிருந்து அதிக நிதியை பெற்றுக் கொள்வதற்கான உயர் ஸ்தானிகர் மிசேல் பச்லெட்டின் நடவடிக்கைக்கு கொழும்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் பச்லெட்டின் கீழ் ஒரு புதிய செயலகம் செயற்படவுள்ளது.
அதற்கான புதிய பதவிகளுக்கு விண்ணப்பங்களை கோருவதற்கு உயர் ஸ்தானிகர் அலுவலகம் ஏற்கனவே விளம்பரம் செய்துள்ளது.