ஏறாவூர் அல் முனீரா வித்தியாலயத்தின் முன்மாதிரி- டெங்கு ஒழிப்பிற்காக விழிப்பூட்ட களமிறங்கிய ஆசிரியர்களும் மாணவர்களும்.

0
2

ஏறாவூர் பிரதேசத்தில் நாளுக்கு நாள் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் ஏறாவூர் பொது சுகாதார பிரிவினர் குறைவான வளங்களை கொண்டு நிறைவான பணியினை மிகுந்த பிரயத்தனத்திற்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏறாவூரின் 03ஏ, மற்றும் 03 ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் பெருகி வருவது தொடர்பில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட வேலைத்திட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் , மிகவும் முன்மாதிரியாக பாடசாலை ஆசிரியர்களையும் உயர்தர மாணவர்களையும் கொண்டு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அனுசரணையுடன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் சமூகத்துடன் இணைந்து உயிராபத்தினை ஏற்படுத்தும் டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் என்.எம்.மஹாத் அவர்களது தலைமையில் , பிரதேசத்துக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் அப்துல் மஜீட் அவர்களது நெறிப்படுத்தலில் சுகாதார பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களது வழிகாட்டலுடன் உயர்தர வகுப்பு மாணவிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு முதற்கட்டமாக பாடசாலை சூழலை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் ,மற்றும் சூழலை நுளம்பு பெருகாத வண்ணம் சுத்தமாக வைத்திருப்பது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் வீடு வீடாக முன்னெடுக்கப்பட்டது, இதன்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

காலத்தின் அவசியமும் , பிரதேசத்தின் தேவைப்பாட்டையும் கருத்திற்கொண்டு ஒரு பாடசாலையானது கல்வியோடு மாத்திரமல்லாது பிரதேசத்தின் சுகாதாரம், ஆராக்கியமான சமூக ,பாதுகாப்பு , முன்னேற்றம் தொடர்பான அத்தனை விடயங்களிலும் தமக்கான பங்களிப்பை வழங்கிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் முன்மாதிரியாக செயற்பட்ட ஏறாவூர் அல் முனீரா வித்தியாலய அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் அடங்கலான நிருவாகத்தினரும் , முன்நின்று வழிநடாத்திய ஏறாவூர் சுகாதார வைத்திய அலுவலகத்தினரும் என்றென்றும் பாராட்டப் பட வேண்டியவர்களே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here