சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் எப்.எஸ்.கே. மியன்டாட் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
ஏ.எச். முர்ஸித் தலைமையிலான சாந்தம் சலேஞ்சர்ஸ், ஏ. சப்னாஸ் தலைமையிலான மருதூர் வோரியர்ஸ், எம்.எஸ். அன்வர் தலைமை வகிக்கும் மாளிகா யுனைடெட், ஏ.எம். ஜஹான் தலைமையிலான வொலி லயன்ஸ் ஆகிய நான்கு அணிகள் இச்சுற்றுத் தொடரில் மோதவுள்ளது. சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம ஹிஜ்ரா திறந்த வெளியில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் போட்டி சனிக்கிழமை இறுதிப் போட்டியுடன் முடிவடையவுள்ளது.
இச்சுற்றுத் தொடரின் முதல் பகுதி இன்று பி.ப 02.30 மணிக்கு சாந்தம் சலேஞ்சர்ஸ் அணியை எதிர்த்து மருதூர் வோரியர்ஸ் அணி மற்றும் மாளிகா யுனைடெட் அணியை எதிர்த்து வொலி லயன்ஸ் அணி ஆகிய கழகங்கள் பங்குபற்றும் போட்டிகளுடன் ஆரம்பமாகவுள்ளது.
சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு ஆரம்பமாகும் இரண்டாம் பகுதியில் மாளிகா யுனைடெட் அணியை எதிர்த்து மருதூர் வோரியர்ஸ் அணி, சாந்தம் சலேஞ்சர்ஸ் அணியை எதிர்த்து வொலி லயன்ஸ் அணி, வொலி லயன்ஸ் அணியை எதிர்த்து சாந்தம் சலேஞ்சர்ஸ் அணி, மாளிகா யுனைடெட் அணியை எதிர்த்து சாந்தம் சலேஞ்சர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று பி.ப 02.30 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டு கழகம் இப்பிராந்தியத்தில் 30 வருடகால வரலாற்றைக் கொண்ட முன்னனி விளையாட்டுக் கழகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நூருல் ஹுதா உமர்