ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு, தனது குடியுரிமையை இரத்துச் செய்தாலும் தான் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்த போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய கருத்தரங்கொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், குடியுரிமையை சுருட்டி எங்காவது சொருவிக்கொள்ளுமாறும் ஜனாதிபதிக்கு யோசனை ஒன்றையும் அவர் முன்வைத்துள்ளார்.
மேலும், மக்கள் விடுதலை முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதை, ஜனாதிபதி உணர்ந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளர்