ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் நேரடி தொடர்புற்றவர்களுக்கு புனர்வாழ்வளிக்க தீர்மானம்!

0
12

ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்பற்றவர்களுக்கு புனர்வாழ்வளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் நாட்களில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புனர்வாழ்வளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதற்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தேசிய புலனாய்வு சேவை ஆகியவற்றின் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.

எத்தனை பேர் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வழங்கப்படவில்லையென புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here