(செய்திப்பிரிவு)

இலங்கையின் அரசியல் மிகவும் கீழ்த்தரமானது. பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷ என்னை கன்னத்தில் அறைந்தாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது.  

பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூற முடியாது என தேசிய இளைஞர் சபையின் முன்னாள் தலைவர் பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவித்தார்.

தனிப்பட்ட காரணத்திற்காகவே தேசிய இளைஞர் சேவை  சபையின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தேன். 

அரசியல் ரீதியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்து செயற்பட்டேன். அரசாங்கத்தின் மூர்க்கத்தனமாக செயற்பாடுகளுக்கு பொறுப்புக் கூற முடியாது.

நான் அரசியல்வாதியல்ல, நாட்டு மக்கள் உருவாக்கிய  அரசாங்கத்தின் மூர்க்கத்தனத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது. இலங்கையின் அரசியல் மிகவும் கீழ்த்தரமானது. எவர் ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் முறைமையினை மாற்றியமைக்க முடியாது.

நாட்டில் அனைத்து தரப்பிலும் மோசடி காணப்படுகிறது. நாட்டை முன்னேற்றுவதற்கு இன்னும் எத்தனை தலைமுறை  எடுக்கும் என்பதை குறிப்பிட முடியாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here