இந்திய ப்ரீமியர் லீக் தொடரை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

0
2

இந்திய ப்ரீமியர் லீக் தொடரை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு சபை தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக ஐபிஎல் அணிகளின் வீரர்கள் மற்றும் ஆளணியினர் சிலருக்கு கொவிட் தொற்றுறுதியானதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கொல்கத்தா நைட்ரைடர்ஸின் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வொரியர் ஆகியோருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் காப்பாளர் ரிதிமன் சஹா மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வீரர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, போட்டித் தொடரின் அனைத்து தரப்பினரையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஸ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தொடரில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் போட்டிகளிலிருந்து இடைவிலக விரும்புவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here