இசை நிகழ்ச்சியில் தாக்கப்பட்ட பாடகர் சித்!

0
19

பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் மீது பார்வையாளர்கள் போத்தல்களை வீசிய சம்பவம் ரசிகர்களிடையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் சித் ஸ்ரீராம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் பாடி வருவதுடன் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவின்- ஐதராபாத் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார் சித் ஸ்ரீராம்.

கொரோனா அச்சம் காரணமாக 50 பேர் மாத்திரமே பங்குக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்.விடுதி உரிமையாளர் அதற்கும் மேற்பட்ட நபர்களை இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதித்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சிக்கு வந்த சிலர் மதுபோதையில் அத்துமீறி நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பலர் சித் ஸ்ரீராம் மீது போத்தல்களை வீசி சித் ஸ்ரீராமை அசிங்கப்படுத்தியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த சித் ஸ்ரீராம் பாதியில் இசை நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here