அரிசியின் விலை மேலும் அதிகரிக்கலாம்!

0
1

பண்டிகை காலம் அண்மிக்கின்ற போது அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்

பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், பாரிய அளவிலான ஆலை உரிமையாளர்களும், நெல்லை கொள்வனவு செய்பவர்களும் கடந்த ஆண்டுகளை போல நெல்லை பதுக்கி வைக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், விவசாயத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் அனில் விஜேசிறி, 3 இலட்சம் மெற்றிக் டொன் அளவில் நெல் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ள நிலையில், அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள விலைக்கேற்ப அதனை கொள்வனவு செய்யவுள்ளதாகவும், எனவே அரிசிக்கான நிர்ணய விலையினை வழங்க முடியும் எனவும் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here