அரசியல்வாதிகளிடமுள்ள பொதுவான ஒற்றுமை

0
72

அரசியல்வாதிகள் தங்களுக்குள் விரோதிகளாகவும், சமூக விடயங்களை முன்னிறுத்தி மக்களுக்காக அவர்கள் மல்லுக்கட்டுவதாக வெளியே தென்பட்டாலும், அவர்களிடம் பொதுவானதொரு ஒற்றுமையுள்ளது.

அது தான் இரகசியம் காக்கின்ற தன்மை. எதனையெல்லாம் வெளியே மேடைகளில் உளறித்திரிந்தாலும், ஒரு விடயத்தைப்பற்றி மட்டும் வாயே திறக்கமாட்டார்கள்.

அதென்ன இரகசியம்?

அது தான் பணத்தினைக் கொட்டிப்பிரித்தல்.

பணத்தினைக் கொட்டிப் பிரிப்பதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதையும், கட்சி மாறியதையும், வேறு கட்சிகளுக்குச் சென்றதையும், வசை பாடியதனையும் பாமர மக்களும், எடுபிடிகளும் அறியமாட்டார்கள்.

என்ன தான் வசைபாடினாலும், பணத்தினைக் கொட்டிப் பிரிப்பதில் தான் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதென்ற சிதம்பர இரகசியத்தை எந்தத்தரப்பாரும் வெளியே கூறுவதில்லை.

ஆனால், அவர்கள் சமூகப் பிரச்சினையை முன்னிறுத்தி அதனாலேயே தங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டதாக வெளியே கூறிக்கொள்வார்கள்.

இதனை பாமர மக்களாகிய நாங்கள் அப்படியே உண்மையென நம்பி விடுகின்றோம். இது தான் எங்களது பலயீனம்.

மக்களின் இந்தப் பலயீனத்தினை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளையடித்து ஏப்பமிடும் அரசியல்வாதிகளிடம், “ஜனாஸா எரிக்கின்றார்கள், மக்களுக்காகப் போராடுங்கள்” என்று நாங்கள் கூறினால் அவர்கள் எப்படிப் போராடுவார்கள்? மொத்த வியாபாரிகளிடம் போராட்ட உணர்விருக்குமா?

முகம்மத் இக்பால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here