அம்பாறை மாவட்ட 26 அணிகள் பங்கேற்ற “”றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட்” கோப்பையை சாய்ந்தமருது விளாஸ்டர் அணி வென்றது !

0
2

மாளிகைக்காடு நிருபர்- நூருல் ஹுதா உமர் 

சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தின் 26 அணிகள் போட்டியிட்ட அணிக்கு ஐவர் ஏழு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட  “றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின்” இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்று கிழமை (11) மாலை சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் விளாஸ்டர் விளையாட்டுக்கழக முகாமையாளர் எம்.ஐ.எம். பஸ்மிரின் நெறிப்படுத்தலில் கழகத்தின் தவிசாளர் ஏ.எல். முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.

இந்த இறுதியாட்டத்தில் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தை எதிர்த்து சாய்ந்தமருது பூம் பூம் அணியினர் மோதினர். முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பூம் பூம் அணியினர் ஐந்து ஓவர்கள் முடிவில் 42 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது விளாஸ்டர் அணியினர் நான்கு பந்துவீச்சு ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு வெற்றியிலக்காண 43 ஓட்டங்களை பெற்றனர். இந்த சுற்று போட்டியின் தொடராட்டக்காரர் விருதை  பூம் பூம் அணி வீரர் பவாஸ் பெற்றுக்கொண்டதுடன் இறுதியாட்ட நாயகராக  விளாஸ்டர் அணி வீரர் ஷிபானும் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக மருதமுனை மறு கெப்பிட்டல் அணி வீரர் முனீஸ் (105 ஓட்டங்கள்) தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக  விளாஸ்டர் வி.க. அணித்தலைவர் ஏ.ஜெ. சவுக்கி (05 விக்கட்டுக்கள்) தெரிவானார்கள். 

இந்நிகழ்வில் கொழும்பு பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.நவாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இலங்கை பொதுசேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும், சிரேஷ்ட நிர்வாகசேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். மேலும் றபீக் கட்டுமான நிறுவன பணிப்பாளர் ஏ.எம். றபீக், காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம். காண்டிபன், விளாஸ்டர் விளையாட்டு கழக தலைவர் ஆர்.எம். இம்தாத், கழக செயலாளர் ஏ.சி.எம். நிஸார், கழக ஊடக செயலாளர் யூ. எல்.என். ஹுதா,  விளாஸ்டர் விளையாட்டு கழக முக்கியஸ்தர்கள் உட்பட அம்பாறை மாவட்ட கிரிக்கட் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here