அனைத்து மத்ரசாக்களையும் தடை செய்யப்போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஐந்து முதல் 16 வயது மாணவர்களிற்கு அராபியமொழியையும் மதத்தையும் கற்பிக்கும் மத்ரசாக்களையே தடை செய்யப்போவதாக தெரிவித்துள்ள அமைச்சர் இது தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரானது என்பதாலேயே தடை செய்யப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான அனுமதியை முஸ்லீம் சமூகமும் சிவில் அமைப்புகளும் வழங்கியுள்ளன என தெரிவித்துள்ளஅமைச்சர் 16 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு கற்பிக்கும் மத்ரசாக்களை தடை செய்யப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.